May 26, 2008

அகத்தவம் - தியானம்- Meditation

வேதாத்திரி மகரிசி மோன தவத்தில்
vethathiri maharishi in deep meditation
உயர்ந்த அகத்தவம்


நிறைந்த குருமூலம் நேர்முகமாய்க்
குண்டலினி யோகம் கற்று
நித்த தவம் ஆழ்ந்தாற்றி உண்மை
உணரப்பெற்றால் முனைப்பு போகும்

இறைவனது பகுதிநிலை உயிர்
மனமாய்த் தேர்ந்து அதன் உறைவிடமாம்
உடலதுவோ சமுதாயம் உற்பத்தி
செய்து பல பொருட்களீந்து

முறையாக வளர்துப் பண்பாட்டுடனே
கல்வி தொழில் காப்புதந்த
முழுக்கதையும் சிந்தனையின் முதிர்ச்சியினால்
உணர்ந்து வினைப் பதிவாய் பெற்ற

அகத்தவத்தின் பெருமை


அகத் தவத்தின் பொருள் கண்டு

அதன் பெருமை உணர்ந்திடுவீர்!

அகத் தவமோ உயிரினிலே

அறிவை ஒடுக்கும் பயிற்சி!

அகத் தவத்தால் மேலும் உயிர்

அம்மாகி மெய்ப்பொருளாம்!

அகத் தவத்தால் வீடுணர்ந்து

அமைதி பெற்று இன்புறலாம்



அகத் தவத்தால் ஐம்புஅனை அடக்கி

அறிவறிந் திடலாம்!

அகத் தவத்தால் அறு குண

ஆளுமைப் பேறடைந்திடலாம்!

அகத் தவத்தால் இல்லறத்தை

அன்பகமாய் ஆற்றிடலாம்!

அகத் தவத்தால் அனைத்துயிர்கள்

அருநட்பைப் பெற்றிடலாம்!

அகத் தவம் தீவினை யகற்றும்

அருள் நெறியை இயல்பாக்கும்!

அகத் தவமே இறைவழிபாடனைதிலும்

ஓர் சிறந்த முறை!

அகத் தவமே உயிர் வழிபாடதனை

விளக்கும் ஒளியாம்!

அகத் தவமே மதங்களெல்லாம்

அடைய விரும்பும் முடிவு!


யோகிராஜ் வேதாத்திரி மகரிசி