Oct 28, 2008

Vethathiri - Holistic Science Group


Here is more information on Vethathiriyan concepts. It is really nice to have these concepts. Want to know more just click here.


Vethathiriyan Concepts

பல் வேறு தலைப்புகளில் மகரிசி அவர்களின் சிந்தனைகள். மேலும் தெரிந்து கொள்ள இங்கே வாருங்கள்.


வேதாத்திரி சிந்தனைகள்

ஐந்தில் அளவு முறை - Proper usage of five senses

அமைதி எனும் சம உணர்வே, அறிவுக்கும் உடலுக்கும் பொருத்தமான உணர்வே, உண்மையான இன்பமாகும்.

உணவு, உழைப்பு, உறக்கம், பாலுறவு, எண்ணம் இவற்றில் அளவோடும், முறையோடும் செயலாற்ற வேண்டும். இந்த ஐந்தில் ஒன்றைக் கூட அலட்சியம் செய்வது கூடாது. அதாவது அடியோடு தடைப்படுத்தவோ, மிகவும் குறைத்துவிடவோ கூடாது; மிகுதியாகவும் கொள்ளக் கூடாது; முரண்பாடாக அனுபவிப்பதும் கூடாது. விழிப்பு நிலையோடு மிதமாக உணவு, உறக்கம், உழைப்பு, உடலுறவு, எண்ணம் எனும் இவ்வைந்தோடு செயல்புரிய வேண்டும். இதனால் துன்பம் எழாமல் காக்கலாம். இயற்கையாக எழும் ஒரு துன்பத்தைக் குறைத்துக் கொள்ளும் அனுபவமே ஒரு இன்ப உணர்வு ஆகும். இன்பத்தை நாடி மிகுதியாக இவற்றை அனுபவிக்கும்போது, உயிராற்றல் மிகுதியாகச் செலவாகி அதன் விளைவாகத் துன்பம் தோன்றும், துன்பம் மிகும். ஐம்புலன் கருவிகளின் நலமும், பொதுவாக உடல் நலமும் கெடும்.

மேலும், மனிதன் தனது உயிராற்றலின் மதிப்புணர்ந்து அதைப் போற்றிக் காத்து வரவேண்டும். மனிதனுக்கு உயிராற்றல் தான் ஒரு பெரும் நிதி. உடல் உறுப்புக்களாலும், ஐம்புலன்களாலும் ஆற்றும் செயல்களில் உயிராற்றலானது அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் என்னும் பஞ்சதன் மாத்திரைகளாக மாற்றம் பெற்றுச் செலவாகிக் கொண்டே இருக்கிறது. இந்த உயிராற்றல் மிகுதியாகச் செலவாகாமல் காத்துவர வேண்டியது அவசியம். ஐம்புலன்கள் மூலமாக உயிராற்றல் மிகுதியாகச் செலவானால் (1) ஐம்புலன் கருவிகள் கெடும் (2) உயிராற்றலின் அளவும், அழுத்தமும் உடலில் குறைந்து உடல்நலம், மனநலம் இரண்டும் குழப்பமடையும். இதன் அவசியத்தையே திருவள்ளுவர்,

"
சுவை, ஒளி, ஊறு, ஓசை நாற்றமென்றைந்தின்
வகை தெரிவான் கட்டேயுலகு" - என்று அருளியதையும் நினைவு கூற வேண்டும்.

விழிப்பு நிலையோடு ஐம்புலன்களின் இயக்கத்தை அளவுபடுத்திக் கொள்வதால் துன்பம் எழாமல் காக்கலாம்; நிலையான இன்பத்தையும் அனுபவிக்கலாம். நெறியுடன் வாழும் இத்தகைய வாழ்க்கை முறையால், தானும் நலமுடன், மகிழ்ச்சியுடன், அமைதியுடன் வாழலாம்; பிறரையும் நமது உதவியால் நலமாக வாழ வைக்கலாம்.

Proper usage of five senses


The balanced feeling of peace, the feeling that is conducive to both the consciousness and the body, is real happiness.

Food, work, sleep, sex and thought-force must be utilised in a balanced and proper manner. None of these five can be ignored. They should not be totally rejected or lowered to a minimal extent or consume in high amount or enjoy it in a controversial manner. Neither should they be consumed in excess nor enjoyed inappropriately. Food, work, sleep, sex and thought-force - the five should be dealt with in a moderated manner, in a state of awareness. As a result, miseries can be prevented from arising. The act of reducing the miseries which arise naturally, is the feeling of Happiness. In the pursuit of happiness, when these are consumed excessively, the life-force gets spent in excess and miseries arise and multiply as a result. The health of the five sensory organs and the general health of the body degrades.

Moreover, man should realise the potential of his life-force and protect and take care of it with respect. Life-force is the great treasure to man. Life-force undergoes self-transformation as pressure, sound, light, taste, smell and gets spent during the activities of the five senses and the various organs in the body. It is essential to protect the life-force from being spent excessively. If the life-force gets spent excessively through the five senses, (1) The five sensory organs will be affected (2) The amount and density of the life-force in the body diminishes, affecting the health of both the body and the mind.

The ancient Tamil poet 'Thiruvalluvar' describes the importance of this as

"The world is for those who know the properties of the five transformations of taste, light, pressure, sound and smell"

Moderating the functioning of the five sensory organs with a state of awareness we can prevent the miseries from arising; and also enjoy constant happiness. By following such disciplined way of life, we can live a healthy, happy and peaceful life; we can also help others to lead a prosperous life.

Oct 26, 2008

பிறப்பின் நோக்கம்

ஆறாவது அறிவைக் கொண்ட இந்த மனிதன் வாழ்வின் நோக்கம், அறிவு முழுமை பெற வேண்டும். இயற்கையின் முழுமையை உணர வேண்டும், எந்தச் சக்தியிலிருந்து நாம் தோன்றி, வந்து இயங்கிக் கொண்டிருக்கிறோமோ அந்த அடிப்படையை உணர்ந்து அதோடு லயமாகி இணைந்து கொள்ள வேண்டும் என்பதேயாகும். இதுதான் பிறப்பின் நோக்கம். (This and this alone is the purpose of life).

சுருங்கச் சொன்னால் இயற்கையானது பல படித்தளமான பரிணாம இயக்கத்திலே தோற்றங்களாகி, ஓரறிவு முதற்கொண்டு ஆறறிவு வரையிலே வந்து மனிதனாகி, தன்னுடைய மதிப்பையும், தன்னுடைய தகைமையையும், தன்னுடைய அழகையும் ரசிக்கவும், உணரவும் அந்த இயற்கையே எடுத்துக் கொண்ட ஒரு உன்னதமான வடிவம் எதுவோ அதுதான் மனிதன்.

மனிதனில் தான் அறிவினுடைய முழுமையைப் பெற முடியும். பழக்கத்தின் வழியே நாம் சிக்கி, தேவை, பழக்கம், சூழ்நிலையின் கட்டாயம் (நிர்பந்தம்). இந்த மூன்றினாலும் உந்தப்பட்டுச் செயல் செய்து கொண்டிருக்கிறோம். இவற்றிலிருந்து விளக்கம் பெற்று, விளக்கத்தின் வழியே நாம் வாழ்க்கையை மாற்றி அமைக்க வேண்டுமானால் உடனடியாக விளக்கம் வராது, பழக்கத்திலிருந்து உடனடியாக மாறி விடவும் முடியாது. முறையான பயிற்சி வேண்டும். விளக்கத்திலேயும் பயிற்சி வேண்டும். அப்படி விளங்கிக் கொண்ட பிறகு நாம் எங்கே இருக்கிறோம், எங்கே போக வேண்டும், அதிலுள்ள வேறுபாடு, தூரம் என்ன என்பதைக் கண்டு, படிப்படியாகத் தன்னை மாற்றி உயர்த்தி அந்த இடத்தை அடைய வேண்டும். அத்தகைய திருப்பம் எதுவோ அது தான் பக்தி மார்க்கம், ஞான மார்க்கம் எனப்படும் ஆன்மீக வாழ்வு ஆகும்.

Oct 25, 2008

SKY programs 2008 and 2009

Vazhga valamudan

You all know Temple of consciousness, Aliyar is always busy in conducting SKY programs throughout the year. Here are the details of the SKY programs for the year 208 and 2009.

2008 programs

2009 programs

Vethathiri - Audios, Videos and e-books

Hi all,

It is a good news, Swamijis audios, videos and e books will be available online.Also, WCSC is to introduce SKY t-shirts. Want to know more about this, just pop in here.

Yes, click here for Vethathiri - Audios, Videos and e-books.

Oct 24, 2008

ஆன்மீகக் கல்வி



ஒரு ஆற்றில் திடீரென வெள்ளம் பெருகி வருகிறது. பல மைல்கள் தொலைவு வரையில் மழையே இல்லை. எப்படித் தண்ணீர் வருகிறது? இதன் காரணமறிந்தால் எவ்வாறு ஒரு நாட்டில் திடீரெனப் போர் உண்டாகிறது என்பதை அறியலாம். எங்கோ பல மைல் தொலைவில் நல்ல மழை பெய்திருக்கிறது. இது ஒரு மேடான பூமி. மழைநீர் கடலை நோக்கி ஓடுகிறது. அந்த நீரைத் தான், வறண்ட ஆற்றில் பெரும் வெள்ளமாகக் காண்கிறோம். இதே போல உலக மக்கள் வாழ்வில் கணக்கிட முடியாத துன்பங்கள் நிலவுகின்றன.

எல்லாத் துன்பங்களுக்கும் காரணம், மனிதன் மதிப்பை, மனிதன் அறியாமல் செய்யும் தவறுகள் தான். எப்படி? அறநெறி வழியே வாழ மக்களுக்கு முறையான 'ஆன்மீகக் கல்வி'யும் இல்லை; பயிற்சியும் இல்லை. பெரும்பாலான மக்கள் இதனால் பொருள், புகழ், அதிகாரம், புலன் இன்பம் நான்கிலே அளவு மீறிய ஆசையைப் பெருக்கிக் கொண்டு வாழ்கிறார்கள். உண்மையில் மனிதருக்குப் பொருளும், புலன் இன்பமும் வாழ்வில் இன்றியமையாதவை.

ஆயினும், அவற்றைப் பெறத் தனது நேர்மையான முயற்சியும், உழைப்பும் வேண்டும். உழைப்பின்றியே பொருளும், இன்பமும் பெறவேண்டுமென்ற வேட்பே, அதிகாரத்திலும், புகழிலும் அடங்கியுள்ளது. இதனால் தான், உலகம் முழுவதும் மனிதகுலம் பொருள், புகழ், அதிகாரம், புலன் இன்பம் என்ற நான்கில் ஆசையைப் பெருக்கிக் கொண்டு என்றும், எதிலும் நிறைவு பெற முடியாமல், இன்னும் வேண்டும் என்ற முடிவில்லாத, அமைதியில்லாத மனநிலையில் சிக்கிக் கொண்டிருக்கிறது. இறையுணர்வாகிய "பிரம்மஞானம்" பெற்றால் தான், மேலே சொல்லப்பட்ட பேராசைகள் நான்கும் மறைந்து 'மனநிறைவு' உண்டாகும்.

An act in Union with the Almighty - இறையோடு இணைந்த செயல்

When we bless, our mind attains a very subtle state of functioning of the Consciousness. When we say “be blessed”, with a cool and calm mind, we should bless ourselves first. Such waves emanating from us also will help the person whom we are blessing. By such practice (of continuous blessing) we will attain a state within a short period, wherein we will be interlinked with the Divine state always. For those who practice such blessing, all their deeds will turn out to be deeds of the Divine.

Similarly, when we bless once and then again and again, say a thousand times. Every word, every thought and every such blessing will gain power with every blessing; when we bless for the next time, that is one thousand first time, what will be the effect - it will have the effect of 1001 blessings. It will carry such a power, pressure and benefit. That’s why it is imperative that we should keep on blessing whenever we find time.

People used to ask we have lot of time after meditation, please teach us some mantras to keep chanting during such times. There is no need for a separate mantra. Blessing is the most effective mantra.

How many friends do we have - fifty or a hundred? Let it be. Let us take one of them first and will start blessing that person, say, a hundred times. Then we will take the next. If we keep on blessing in this manner, we will be left with no time for blessing! In this process, we have to pick those who may have done any misdeed to us first. Those who have done good deeds shall be taken up next. When we keep on blessing, a link between the life force of the blessed and the person blessing (ourselves) will be established. In due course, even those who did misdeeds towards us or who may have ill feeling towards us will find a change when we think of such persons. They will start thinking, why I did such a wrong to him; why did I misunderstood him - and the life force interaction established with them will cause a tremendous change in their character and cause them to do only good towards us henceforth.

Thus, when we bless the good friends we express our gratitude towards them. When we bless those who have done wrong to us we derive twin advantage - we negate the misdeeds first, nay, that person will start doing only good for us.



நாம் வாழ்த்தும் போது முதலாவது நமது மனம் இறை உணர்வோடு அதாவது அறிவின் இயக்கத்தில் நுண்ணிய பகுதியை அடைகிறது. "வாழ்க" என்று சொல்லும்போதே, குளிர்ச்சியாக நல்ல எண்ணத்தோடு சொல்லும் போது, நாமே முதலில் நம்மை வாழ்த்திக் கொள்ள வேண்டும். அந்த அலை எழும்போதும் அவர்களுக்கு உதவியாக இருக்கிறது. இப்படி வாழ்த்தி வாழ்த்திச் சிறிது காலத்தில் நீங்கள் தானாகவே இறை உணர்வில் கலந்திருக்கும் நிலை உருவாகும். இவ்வாறு வாழ்த்திப் பழகிக் கொண்டவர்களுக்கு எல்லாச் செயலும் அந்த இறையோடு இணைந்த செயலாக, நற்செயலாக இருக்க முடியும். அதே போல நீங்கள் ஒரு வாழ்த்துச் சொல்கிறீர்கள், பல தடவை சொல்கிறீர்கள். ஆயிரம் தடவை சொல்லும்போது ஒவ்வொரு சொல்லுக்கும், ஒவ்வொரு நினைவுக்கும் அந்த வாழ்த்துக்கும், ஆயிரம் தடவை வாழ்த்திவிட்ட பிறகு ஆயிரத்தோராவது தடவை வாழ்த்தினால் என்ன பலன் என்றால், ஆயிரத்தோரு தடவை வாழ்த்தினால் என்ன பலனோ அந்த அளவுக்கு அழுத்தம், பயன்பெறும். ஆகவே ஓய்வு இருக்கும் நேரத்தில் எல்லாம் வாழ்த்திக் கொண்டே இருக்க வேண்டும்.

தவம் செய்த பிறகு இருக்கும் நேரத்தில் என்ன செய்வது, அதற்கு ஏதாவது மந்திரங்கள் சொல்லிக் கொடுங்கள் என்று கேட்பார்கள். அதற்குத் தேவையே இல்லை, வாழ்த்து என்கிற மந்திரம் எப்பொழுதும் இருக்கிறது. உங்களுக்கு எத்தனை நண்பர்கள் இருக்கிறார்கள்? ஐம்பது பேர், நூறு பேர் என்று சொல்லுகிறீர்கள் அல்லவா? அதிலே ஒருவரை எடுத்துக் கொண்டு நூறு தடவை வாழ்த்துங்கள். பிறகு இன்னொருவரை நூறு தடவை வாழ்த்துங்கள். தீமை செய்தவரை முதலில் வாழ்த்துங்கள். நன்மை செய்தவரைப் பின்னால் வாழ்த்துங்கள். அதன் பிறகு நேரம் இருக்கிறதா என்று பார்த்தால் நேரமே இருக்காது. நீங்கள் வாழ்த்திக் கொண்டே இருக்க இருக்க, உயிர்க் கலப்பு வர வர தீமை செய்யக் கூடியவர்கள், தீமையான எண்ணம் உடையவர்கள் எல்லாம் நாம் நினைக்கும்போது அவர்களுக்கும் ஒரு திருப்பம் வந்து விடும். இவரோடு போராட்டம் செய்தேனே, இவருக்குப் போய் தீமை செய்தோமே, தவறாக நினைத்தோமே என்ற எண்ணம் வரும். இந்த உயிரோட்டம் (interaction) அவர்கள் உள்ளத்திலே தானாகவே அவர்களுடைய நிலைமையை மாற்றி, குணத்தை மாற்றி நன்மையே செய்வதற்குப் பலன் கொடுக்கும். ஆகவே நல்லவர்களை வாழ்த்துவதனால் நன்றி தெரிவித்துக் கொள்கின்றீர்கள். பொல்லாதவர்களை வாழ்த்துவதனால் இரண்டு பலன் கிடைக்கிறது: தீமையை முதலில் விலக்கிக் கொள்கிறோம், அது மாத்திரம் இல்லை, அவனை வாழ்த்திக் கொண்டே இருக்க இருக்க அந்தத் தீமை செய்தது போக நன்மை செய்கிறான்.

யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி