Aug 18, 2010

வேதாத்திரி மகரிசி நூற்றாண்டு விழா




வேதாத்திரி மகரிசியின் 100 வது பிறந்த நாள் விழா சென்னையில் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் தலைமையில் நடந்தது. இதில் சுவாமிஜியின் தபால் தலை வெளியிடப்பட்டது.




Click here for the press release of TNGOVT


மேலும் இங்கே பார்க்க...


http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Latest%20News&artid=287663&SectionID=164&MainSectionID=164&SEO=&Title=

வாழ்க வேதாத்திரியம் வளர்க வேதாத்திரியம் என்றும் குரு வழியில்........

Nov 1, 2008

சித்து Black Magic

ஜால வித்தை போன்ற சித்துக்களை விளையாடும் - அவைகளைக் கற்றுக் கொள்ள விரும்பும் அன்பர்களுக்கும், இத்தகைய சித்துக்களைக் காணத் துடிக்கும் - கண்டு வியப்புற்று மதிமயங்கும் நண்பர்களுக்கும், உருக்கத்தோடு சொல்லுகிறேன். "சமூகத்திற்கு எந்தவித நன்மையும் விளைவிக்காத நஷ்டமும், கஷ்டமுமே தரும் செயல்கள் பலவற்றை 'சித்து' எனக் கொள்ளும் மயக்கத்தை விட்டு விடுங்கள்" நன்றாக ஆராயுங்கள்.

ஒரு துளி விந்துவைக் கருப்பையில் வாங்கிப் பத்தாவது மாதத்தில் எழில் மிகுந்த அற்புதச் சிற்பமான குழ்ந்தையாக்கித் தரும் தாய்மார்களின் உடலில் நடைபெறும் சித்து எத்தகையது? ஒரு நெல்லை நூறு நெற்களாக்கித் தரும் விவசாயியின் செயல் ஒரு சித்து அல்லவா? ஒரு பொத்தானை ஒரு இடத்தில் அமுக்கினால், எவ்வளவோ இடத்தில் எண்ணிறந்த விளக்குகள் எரிகின்றனவே இது ஒரு 'பெருஞ்சித்து' அல்லவா? இரும்பை நகரச் செய்தும், பறக்கச் செய்தும் அதன்மூலம் கோடிக்கணக்கான மக்கள் சுலபமாகப் பல மைல் தூரத்தை எளிதாகக் கடந்து பிரயாணம் செய்யும் வசதியை ஏற்படுத்தி இருக்கிறார்களே சில தொழில் அறிஞர்கள். இது எத்தகைய சித்து?

ஒரு நாளைக்கு இருபத்தைந்தாயிரம் மைல் வேகத்தில் தன்னைத் தானே சுற்றியும் சுமார் 16 இலட்சம் மைல் வேகத்தில் சூரியனைச் சுற்றியும் வரும் பூமியின் இயக்கத்தை, எந்த விதமான சித்து என மதிக்க வேண்டும். இவ்விதமாக இயற்கையிலும் செயற்சையிலும் நடைபெறும் சித்துக்களை ஊன்றி ஆராயுங்கள்.

For those who perform illusionary tricks which seem like miracles, for those who want to learn them, for those who are eager to watch them and for our friends who get mesmerized by such acts, I say this earnestly “Please step out of your views of assuming those acts, which do not cause any benefit to the society but only infict harm and loss, as miracles”. Think deeply.

What a miracle it is that takes place in the body of a mother which receives a small drop of sperm in the uterus and gives out a elegant and lovely sculptured baby in the tenth month? The work of a farmer in multiplying a single seed into hundred seeds - is it not a miracle? When you press a button, innumerable lights glow in many places. Is this is not a great miracle? What a miracle are the facilities created by intellectuals in the industrial field, moving the iron, making it fly; through which millions of people are transported across many miles easily.

We have to respect the miracle by which the earth rotates itself at a speed of 25000 miles per day and revolves around the sun at a velocity of approximately 16 lakh miles. In this manner, examine deeply all the different miracles which are happening ever day in nature and in man made creations.

Oct 28, 2008

Vethathiri - Holistic Science Group


Here is more information on Vethathiriyan concepts. It is really nice to have these concepts. Want to know more just click here.


Vethathiriyan Concepts

பல் வேறு தலைப்புகளில் மகரிசி அவர்களின் சிந்தனைகள். மேலும் தெரிந்து கொள்ள இங்கே வாருங்கள்.


வேதாத்திரி சிந்தனைகள்

ஐந்தில் அளவு முறை - Proper usage of five senses

அமைதி எனும் சம உணர்வே, அறிவுக்கும் உடலுக்கும் பொருத்தமான உணர்வே, உண்மையான இன்பமாகும்.

உணவு, உழைப்பு, உறக்கம், பாலுறவு, எண்ணம் இவற்றில் அளவோடும், முறையோடும் செயலாற்ற வேண்டும். இந்த ஐந்தில் ஒன்றைக் கூட அலட்சியம் செய்வது கூடாது. அதாவது அடியோடு தடைப்படுத்தவோ, மிகவும் குறைத்துவிடவோ கூடாது; மிகுதியாகவும் கொள்ளக் கூடாது; முரண்பாடாக அனுபவிப்பதும் கூடாது. விழிப்பு நிலையோடு மிதமாக உணவு, உறக்கம், உழைப்பு, உடலுறவு, எண்ணம் எனும் இவ்வைந்தோடு செயல்புரிய வேண்டும். இதனால் துன்பம் எழாமல் காக்கலாம். இயற்கையாக எழும் ஒரு துன்பத்தைக் குறைத்துக் கொள்ளும் அனுபவமே ஒரு இன்ப உணர்வு ஆகும். இன்பத்தை நாடி மிகுதியாக இவற்றை அனுபவிக்கும்போது, உயிராற்றல் மிகுதியாகச் செலவாகி அதன் விளைவாகத் துன்பம் தோன்றும், துன்பம் மிகும். ஐம்புலன் கருவிகளின் நலமும், பொதுவாக உடல் நலமும் கெடும்.

மேலும், மனிதன் தனது உயிராற்றலின் மதிப்புணர்ந்து அதைப் போற்றிக் காத்து வரவேண்டும். மனிதனுக்கு உயிராற்றல் தான் ஒரு பெரும் நிதி. உடல் உறுப்புக்களாலும், ஐம்புலன்களாலும் ஆற்றும் செயல்களில் உயிராற்றலானது அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் என்னும் பஞ்சதன் மாத்திரைகளாக மாற்றம் பெற்றுச் செலவாகிக் கொண்டே இருக்கிறது. இந்த உயிராற்றல் மிகுதியாகச் செலவாகாமல் காத்துவர வேண்டியது அவசியம். ஐம்புலன்கள் மூலமாக உயிராற்றல் மிகுதியாகச் செலவானால் (1) ஐம்புலன் கருவிகள் கெடும் (2) உயிராற்றலின் அளவும், அழுத்தமும் உடலில் குறைந்து உடல்நலம், மனநலம் இரண்டும் குழப்பமடையும். இதன் அவசியத்தையே திருவள்ளுவர்,

"
சுவை, ஒளி, ஊறு, ஓசை நாற்றமென்றைந்தின்
வகை தெரிவான் கட்டேயுலகு" - என்று அருளியதையும் நினைவு கூற வேண்டும்.

விழிப்பு நிலையோடு ஐம்புலன்களின் இயக்கத்தை அளவுபடுத்திக் கொள்வதால் துன்பம் எழாமல் காக்கலாம்; நிலையான இன்பத்தையும் அனுபவிக்கலாம். நெறியுடன் வாழும் இத்தகைய வாழ்க்கை முறையால், தானும் நலமுடன், மகிழ்ச்சியுடன், அமைதியுடன் வாழலாம்; பிறரையும் நமது உதவியால் நலமாக வாழ வைக்கலாம்.

Proper usage of five senses


The balanced feeling of peace, the feeling that is conducive to both the consciousness and the body, is real happiness.

Food, work, sleep, sex and thought-force must be utilised in a balanced and proper manner. None of these five can be ignored. They should not be totally rejected or lowered to a minimal extent or consume in high amount or enjoy it in a controversial manner. Neither should they be consumed in excess nor enjoyed inappropriately. Food, work, sleep, sex and thought-force - the five should be dealt with in a moderated manner, in a state of awareness. As a result, miseries can be prevented from arising. The act of reducing the miseries which arise naturally, is the feeling of Happiness. In the pursuit of happiness, when these are consumed excessively, the life-force gets spent in excess and miseries arise and multiply as a result. The health of the five sensory organs and the general health of the body degrades.

Moreover, man should realise the potential of his life-force and protect and take care of it with respect. Life-force is the great treasure to man. Life-force undergoes self-transformation as pressure, sound, light, taste, smell and gets spent during the activities of the five senses and the various organs in the body. It is essential to protect the life-force from being spent excessively. If the life-force gets spent excessively through the five senses, (1) The five sensory organs will be affected (2) The amount and density of the life-force in the body diminishes, affecting the health of both the body and the mind.

The ancient Tamil poet 'Thiruvalluvar' describes the importance of this as

"The world is for those who know the properties of the five transformations of taste, light, pressure, sound and smell"

Moderating the functioning of the five sensory organs with a state of awareness we can prevent the miseries from arising; and also enjoy constant happiness. By following such disciplined way of life, we can live a healthy, happy and peaceful life; we can also help others to lead a prosperous life.

Oct 26, 2008

பிறப்பின் நோக்கம்

ஆறாவது அறிவைக் கொண்ட இந்த மனிதன் வாழ்வின் நோக்கம், அறிவு முழுமை பெற வேண்டும். இயற்கையின் முழுமையை உணர வேண்டும், எந்தச் சக்தியிலிருந்து நாம் தோன்றி, வந்து இயங்கிக் கொண்டிருக்கிறோமோ அந்த அடிப்படையை உணர்ந்து அதோடு லயமாகி இணைந்து கொள்ள வேண்டும் என்பதேயாகும். இதுதான் பிறப்பின் நோக்கம். (This and this alone is the purpose of life).

சுருங்கச் சொன்னால் இயற்கையானது பல படித்தளமான பரிணாம இயக்கத்திலே தோற்றங்களாகி, ஓரறிவு முதற்கொண்டு ஆறறிவு வரையிலே வந்து மனிதனாகி, தன்னுடைய மதிப்பையும், தன்னுடைய தகைமையையும், தன்னுடைய அழகையும் ரசிக்கவும், உணரவும் அந்த இயற்கையே எடுத்துக் கொண்ட ஒரு உன்னதமான வடிவம் எதுவோ அதுதான் மனிதன்.

மனிதனில் தான் அறிவினுடைய முழுமையைப் பெற முடியும். பழக்கத்தின் வழியே நாம் சிக்கி, தேவை, பழக்கம், சூழ்நிலையின் கட்டாயம் (நிர்பந்தம்). இந்த மூன்றினாலும் உந்தப்பட்டுச் செயல் செய்து கொண்டிருக்கிறோம். இவற்றிலிருந்து விளக்கம் பெற்று, விளக்கத்தின் வழியே நாம் வாழ்க்கையை மாற்றி அமைக்க வேண்டுமானால் உடனடியாக விளக்கம் வராது, பழக்கத்திலிருந்து உடனடியாக மாறி விடவும் முடியாது. முறையான பயிற்சி வேண்டும். விளக்கத்திலேயும் பயிற்சி வேண்டும். அப்படி விளங்கிக் கொண்ட பிறகு நாம் எங்கே இருக்கிறோம், எங்கே போக வேண்டும், அதிலுள்ள வேறுபாடு, தூரம் என்ன என்பதைக் கண்டு, படிப்படியாகத் தன்னை மாற்றி உயர்த்தி அந்த இடத்தை அடைய வேண்டும். அத்தகைய திருப்பம் எதுவோ அது தான் பக்தி மார்க்கம், ஞான மார்க்கம் எனப்படும் ஆன்மீக வாழ்வு ஆகும்.