May 21, 2008

இச்சை -- ஞானமும் வாழ்வும் -- அருள் தந்தை யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி


இச்சையின்றியே நாம் உடலாய் வந்தோம்
இச்சைக்கடங்காமலே உடல் மாய்ந்திடும்
இச்சையுள்ளவரையே நம் வாழ்வாகும்
இச்சை ஒழித்திட ஏன் முயலுகின்றீர்கள்.

இச்சை என்பது தேவையுணர்வாகும்
இச்சை மீறச் செயல் வேகமாகிவிடும்
இச்சைச் செயலில் இணைந்திடும் மீறிடும்
இச்சைப் பழக்கத்தால் எண்ணங்களாகிவிடும்.

இச்சையில் கற்பனை எழுவதை ஆய்ந்தறி
இச்சித்தனுபவித்திச்சை இயல்பைப் பார்
இச்சையின் சக்தியை இச்சையில் சேமிக்க
இச்சை உயர்ந்திடும் இன்பம் பெருகிடும்

இச்சை தொடர்புறும் இடமொக்க இயங்டும்
இச்சையின் பலனாகும் இன்பமும் துன்பமும்
இச்சையின் முடிவில் இதே சிவம்
இச்சைத் தத்துவம் இயற்கையின் உச்சமாம்

இச்சித்த பயனாக இதுவரை கண்டதென்ன?
இச்சை சுகதுக்கத்தபாலும் உள்ளதோ?
இச்சையின் காரணம் என்ன? வினவிக்கொள்
இச்சை இருப்பு இயல்பியக்கம் தோன்றும்

இச்சையின்றேல் ஏது இப்பிரபஞ்சம்
இச்சைக்குள்தானே இயங்குகிறது
இச்சை விரிந்திட ஐம்புலனே வழி
இச்சை அறிவென்ற பெயர் பெற்றதினாலே

இச்சை ஒலி, ஒளி போல் எழும் மாறிடும்
இச்சை வெளியோடு இணைந்து ஒன்றாகிவிடும்
இச்சை இயங்காத இடமதே சூனியம்
இச்சையும் அதுவாகி இரண்டற்றுப் போமங்கே

இச்சையே ஒரு நாடக மன்றம் போல்
இச்சையே அதில் எண்ணற்ற நடிகரும்
இச்சையே அதைப் பார்ப்போர் ரசிப்போராம்
இச்சையே அதன் நிர்வாகி உடையவன்

இச்சை தோன்றும் சுயமாகவும் பிறர்
இச்சையும் உன்னுள் பிரதி பலித்திடும்
இச்சை எழும் போதே ஆய்வோர் அறிவார்கள்
இச்சை இச்சையாலும் திறன் காண்பார்

இச்சை வேகமே மீறிட மீறிட
இச்சிக்கும் வேகமாய் இயங்கும் நிலையைப்பார்
இச்சை வேகமும் இயங்கும் வேகமும்
இச்சித்தறிந்திட இரண்டும் நீ அவ்விடம்

இச்சை இயங்கும் நிலைக்கேற்ப பெயர் பெறும்
இச்சையே காம முதலான அருகுணம்
இச்சையின்றேன் உயர் ஞான்ந்தான் ஏது?
இச்சையே நி நான் இவர் அவர் என்பதும்

இச்சையின் மூலமும் முடிவும் ஒரே நிலை
இச்சை ரசிப்பது எண்ணுதல் அறிவாகும்
இச்சை பொருள் வரை இயங்க ஐயுணர்வாகும்
இச்சை உயர்ந்து தன்னிலை கண்டால் ஞானமாம்

இச்சையை புள்ளியாய் நிறுத்தப் பழகிடு
இச்சை விரிந்தால் ஆராய்ச்சியாக்கிடு
இச்சை விரிந்து பேராதார நிலையெய்த
இச்சைப் புலன்களை வென்று நிலை பெறும்

இச்சை முதல் படி * காமதேனு வென்பார்
இச்சை ஒழுங்குற்றால் கற்பகம் என்பார்கள்
இச்சை உயர்நிலை சிந்தாமணி யாகும்
இச்சை நிலைக்கேற்ப இம்மூன்று பேர் பெறும்

இச்சை வேகம் தடைப்படும் காலத்தில்
இச்சைச் சினமாக கவலையாய் நிலைமாறும்
இச்சையின் தோற்றமும் கவலையாய் நிலைமாறும்
இச்சை தோற்றமும் முடிவுமறிந்திடில்
இச்சையே எல்லை யற்ற பராபரம்.

*

  • காம + தேனு = ஆசைப் பசு
  • கற்பு + அகம் = கற்பகம்
  • சிந்தா + மணி = சிந்தை உறுதி

--அருள் தந்தை யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி --

www.vethathiri.org